மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது எனச் சிலர் கூறுவர். இந் நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்க புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். இந் நூலுள் பத்துப் பத்துக்களும் ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது.
1. சிறந்த பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
2. அறிவுப்பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப.
2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.
3. சோரா நல் நட்பு உதவியின் அறிப.
4. கற்றது உடைமை காட்சியின் அறிப.
5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.
6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.
7. குத்திரம் செய்தலின், கள்வன் ஆதல் அறிப.
8. சொற்சோர்வு உடைமையின், எச் சோர்வும் அறிப.
9. அறிவு சோர்வு உடைமையின், பிறிது சோர்வும் அறிப.
10. சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.
3. பழியாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார்.
2. மீப்பு இலோரை மீக் குணம் பழியார்.
3. பெருமை உடையதன் அருமை பழியார்.
4. அருமை உடையதன் பெருமை பழியார்.
5. நிறையச் செய்யாக் குறை வினை பழியார்.
6. முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார்.
7. செயத்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார்.
8. அறியாத தேசத்து, ஆசாரம் பழியார்.
9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
4. துவ்வாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.
2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.
5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
5. அல்ல பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
2. தராம் மாணாதது வாழ்க்கை அன்று.
3. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று.
4. சோரக் கையன் சொல்மலை அல்லன்.
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்.
6. நேராமல் கற்றது கல்வி அன்று.
7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.
9. திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று.
10. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று.
6. இல்லை பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை.
2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை.
3. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை.
4. வாயா விழைச்சின் தீ விழைச்சு இல்லை.
5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.
6. உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை.
7. நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை.
8. இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை.
9. இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.
10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.
7. பொய்ப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய்.
2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.
3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.
4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.
6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.
7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.
10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.
8. எளிய பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது.
2. உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது.
3. ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது.
4. குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது.
5. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.
6. இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது.
7. உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது.
8. பெண்டிர் வெய்யோர்க்குப் படு பழி எளிது.
9. பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது.
10. சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது.
9. நல்கூர்ந்த பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று.
2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.
3. செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று.
4. பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.
5. தற் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.
6. முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.
7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.
8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று.
9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று.
10. நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று.
10. தண்டாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான்.
2. வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான்.
3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.
4. நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான்.
5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.
6. மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான்.
7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.
8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.
9. ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான்.
10. காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான்.
Saturday, October 27, 2007
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - நாலடியார்
நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்பட்டன. நாலடியாரும் அவற்றுள் ஒன்று. முப்பொருள்களையும் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்கணக்கு நூல்களின் சிறப்பாகும். இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது.
கடவுள் வாழ்த்து
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
அறத்துப்பால்
1. துறவற இயல்
1. செல்வம் நிலையாமை
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.
2. துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
3. யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
4. நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.
6. இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
2. இளமை நிலையாமை
11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.
12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
14. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.
16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
3. யாக்கை நிலையாமை
21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
22. வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
23. மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
24. சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
26. நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
27. படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை
மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
4. அறன் வலியுறுத்தல்
31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
37. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
5. தூய் தன்மை
41. மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
42. தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.
43. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
44. தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
45. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
46. குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
47. ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
48. பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி.
49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
6. துறவு
51. விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
53. இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.
54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
55. கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.
56. மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
58. தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.
60. துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
7. சினம் இன்மை
61. மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
62. தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
63. காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
64. நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
65. இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
66. கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
67. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
68. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
69. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
8. பொறையுடைமை
71. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
73. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.
74. அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
76. இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
77. பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.
78. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.
79. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.
80. தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.
9. பிறர்மனை நயவாமை
81. அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
82. அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.
83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
84. காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.
85. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
86. பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.
88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.
89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
10. ஈகை
91. இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.
92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.
94. இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.
95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
96. நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு.
98. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.
99. இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.
11. பழவினை
101. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
102. உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.
103. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
105. தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.
106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.
12. மெய்ம்மை
111. இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.
112. தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
113. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.
114. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.
115. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
117. தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.
118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்?
120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது.
13. தீவினை அச்சம்
121. துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
125. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
126. சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
127. யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
128. உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
பொருட்பால்
14. கல்வி
131. குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.
134. வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
135. கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
136. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
137. தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.
138. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
139. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
140. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
15. குடிப்பிறப்பு
141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.
142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது - வான்தோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று.
144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்?
145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந்தார்.
146. இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.
147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.
149. செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
16. மேன் மக்கள்
151. அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
152. இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?
153. நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.
155. புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
157. கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.
158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.
160. உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.
17. பெரியாரைப் பிழையாமை
161. பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
162. பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
164. விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
165. எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.
166. நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
167. மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.
168. தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும்.
169. கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
170. பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.
18. நல்லினம் சேர்தல்
171. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
172. அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
174. இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
176. ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.
177. பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; - தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
178. கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம்.
179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினம் சேரக் கெடும்.
180. மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.
19. பெருமை
181. ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவும் உள.
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது.
185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை.
186. பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
188. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; - எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
189. கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
190. முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
20. தாளாண்மை
191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு?
192. ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
194. இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.
195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
196. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.
197. சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
198. ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்.
199. தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
21. சுற்றம் தழால்
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
203. அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார்பெரியோர்; - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானும் இனிது.
207. நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.
208. முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.
209. நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
210. விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து.
22. நட்பாராய்தல்
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
212. இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.
213. யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு.
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்.
216. கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.
217. கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று.
220. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு.
23. நட்பிற் பிழை பொறுத்தல்
221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
222. செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
223. இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.
224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
225. இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
226. இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற்று என்றுதம் கை.
227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.
228. ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
229. தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தார் ஆயின், - அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.
230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
24. கூடா நட்பு
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கருமம் முற்றும் துணை.
232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு.
233. நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.
234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு.
235. செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.
237. முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
நெடுமொழி வையம் நக.
239. ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.
240. உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
விரிபெடையோடு ஆடிவிட் டற்று.
இன்பவியல்
25. அறிவுடைமை
241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.
242. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும்.
243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.
244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.
245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.
246. பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
247. உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
249. கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.
250. கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
26. அறிவின்மை
251. நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
பூவின் கிழத்தி புலந்து.
253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
255. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.
257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு.
258. பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.
259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
260. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; - மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
27. நன்றியில் செல்வம்
261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
263. மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.
264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.
265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
266. நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.
268. வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய இருந்து.
269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
துன்பியல்
28. ஈயாமை
271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
272. எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
274. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
276. எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.
277. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
278. தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
279. இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
280. ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
29. இன்மை
281. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.
282. நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைத்து.
283. கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.
284. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.
285. பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.
286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.
287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.
288. இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
289. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.
290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.
30. மானம்
291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்.
292. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
293. யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.
294. இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
297. கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
298. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
299. நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண்.
300. கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.
31. இரவச்சம்
301. நம்மாலே ஆவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.
302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.
303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லால்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
எருத்திறைஞ்சி நில்ல தாம் மேல்.
305. கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்னை கொல்
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.
306. இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற்கு - என்னைகொல்
காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்டு
ஏதில் அவரை இரவு.
307. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்து
என்றும் அவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன்.
308. புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென்று இரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.
309. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுதல் அல்லால் - பரிசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற்கு இன்னாதே
பையத்தான் செல்லும் நெறி?
310. பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க; - கிழமை
பொறாஅர் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்து
அறாஅச் சுடுவதோர் தீ.
பொதுவியல்
32. அவையறிதல்
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.
312. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
313. சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
314. கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.
316. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
317. பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
319. பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?
320. இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.
33. புல்லறிவாண்மை
321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.
322. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.
323. இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்?
324. உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.
325. எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.
326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.
327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.
328. சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.
329. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.
330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
34. பேதைமை
331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
332. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
333. குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
334. கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.
335. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.
336. தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
338. நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.
339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
35. கீழ்மை
341. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.
342. காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.
343. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.
344. தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.
345. பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.
346. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.
347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
348. கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.
349. பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர்.
350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.
36. கயமை
351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.
352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.
353. கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.
354. கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
355. தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
356. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.
357. ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.
358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.
359. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.
360. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.
பன்னெறியியல்
37. பன்னெறி
361. மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.
362. வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
363. எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
364. கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.
365. தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.
366. கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
367. செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.
368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.
காமத்துப்பால்
இன்ப துன்ப வியல்
38. பொது மகளிர்
371. விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
372. அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.
374. ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.
375. பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
376. பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
377. ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.
378. ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.
379. ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.
380. உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
இன்ப வியல்
39. கற்புடை மகளிர்
381. அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
382. குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
385. எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
386. ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.
388. கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.
389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.
390. அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.
40. காம நுதலியல்
391. முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
392. தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
394. செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.
395. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.
396. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.
397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
398. கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.
399. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.
400. கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -நான்மணிக்கடிகை
விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் இப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். விளம்பி என்பது ஊரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந் நூலில் உள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் மாயவனை பற்றியவை. எனவே, நூல் ஆசிரியர் வைணவ சமயத்தினர் என்று கொள்ளலாம். கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 செய்யுட்கள் உள்ளன. 'மதி என்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், 'கற்ப, கழிமடம் அஃகும்' (27), 'இனிது உண்பான் என்பான்' (58), என்னும் செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்கள். ஏனைய அனைத்தும் நேரிசை, இன்னிசை, அளவியல் வெண்பாக்கள்.
கடவுள் வாழ்த்து
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம்.
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின்
அருமை அழித்த மகன்.
நூல்
எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து! 1
பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு. 2
மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து
ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன். 3
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
நல் ஆள் பிறக்கும் குடி? 4
கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென்
அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம்
பொருளில் பிறந்துவிடும். 5
திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 6
'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள்
செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்
காப்பார்க்கும் இல்லை, துயில். 7
கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும். 8
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
தான் செல் உலகத்து அறம். 9
கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,
மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,
இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல்! 10
கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,
ஆக்கம் சிதைக்கும் வினை. 11
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு
கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,
முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்
தவத்தின் தருக்குவர், நோய். 12
பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று. 13
வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்
இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,
கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,
இன்மைக் குழியுள் விரைந்து. 14
இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து
மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு
செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது
வேண்டின், வெகுளி விடல்! 15
கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல்
தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம்
கற்றான் கடந்துவிடும். 16
பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர். 17
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,
நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல். 18
பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,
பாடல் அதிர்ந்துவிடும். 19
மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும்
திசைக்குப் பாழ், நட்டோ ரை இன்மை; இருந்த
அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்,
கற்று அறிவு இல்லா உடம்பு. 20
மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின். 21
புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு. 22
மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,
அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும்,
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல். 23
நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும். 24
அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த
எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்
கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை,
நட்டார்கண் விட்ட வினை! 25
கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்
பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்
துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்
விளி நோக்கி இன்புறூஉம், கூற்று. 26
கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,
தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே
இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 27
குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்
செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு. 28
திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். 29
புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த
நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்
இன்னா வித்து ஆகிவிடும். 30
பிணி அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும்
புல் அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர்,
வல்லென்ற நெஞ்சத்தவர். 31
அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும்,
தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும்
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்,
இளமையோடு ஒப்பதூஉம் இல். 32
இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின்
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின்,
அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய
பெரியரான் எய்தப்படும். 33
மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;
வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி
ஊரில் பிளிற்றிவிடும். 34
மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள்,
நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய
முழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம், மேல். 35
நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின்
தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய
பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது
பாடல் உணர்வாரகத்து. 36
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல்
செய்யாமை, செல்சார் உயிர்க்கு. 37
கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக்
கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட
இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார்
முன்னியவே செய்யும், திரு. 38
திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக்
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற
மறைக்க மறையாதாம், காமம்; முறையும்
இறை வகையான் நின்றுவிடும். 39
பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால்,
'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும். நல்லாள்
உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில்,
கண்டனவும் காணா கெடும். 40
போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த
வேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய்
மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின்
மன்னர் சீர் வாடிவிடும். 41
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும்
காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள்
முந்து தான் செய்த வினை. 42
பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட
ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா
நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின்,
நண்பினார் நண்பு கெடும். 43
நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற
விருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்
பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து. 44
நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய
மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்
முகம் போல முன் உரைப்பது இல். 45
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம் இலார் இல்வழி இல்லை; தவமும்
அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும்
இல் வாழ்வார் இல்வழி இல். 46
போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன்
தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல்
வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம்
நனையினான் நந்தும், நறா. 47
சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று
'இல்' என்றல் யார்க்கும் அரிது. 48
இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்;
உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளா
முன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும்,
தன் அடைத்த சேனை சுடும். 49
எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை
உள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்து
சேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும்
தேர்தற்பொருள, பொருள். 50
யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால்
மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின்
வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள. 51
எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,
ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனாபதி. 52
யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்
கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை
அல்லார் உவப்பது கேடு. 53
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்
என்ன கடவுளும் இல். 54
கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார்
செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென
உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும்
புற்ற அன்னர், புல்லறிவினார். 55
மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்,
பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்;
துறப்பார், துறக்கத்தவர். 56
என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்;
என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர். 57
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன். 58
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும்,
பாடு அறியாதானை இரவு. 59
நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து
வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து
கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி
நன்று ஊட்ட, நந்தும், விருந்து. 60
பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின்
நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான்,
போற்றாதார் போற்றப்படும். 61
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி,
நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள. 62
திரி அழல் காணின், தொழுப; விறகின்
எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்
இளமை பாராட்டும், உலகு. 63
கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்
முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம்
ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள்
துன்புறுவாள் ஆகின், கெடும். 64
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்
புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின்
அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம்
வரிசையான் இன்புறூஉம், மேல். 65
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும்
முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்
அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம்,
அவா இல்லார் செய்யும் வினை. 66
கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்;
வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து
வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின்
நல்லர் சிதையாதவர். 67
மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன்
முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீணர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு
வானம் உரைத்துவிடும். 68
பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன்
மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்
ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும்
சோற்றான் வீறு எய்தும், குடி. 69
ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட
குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்
வளத்த அனைய, வாழ்வார் வழக்கு. 70
ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார். 71
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம்
ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய்
பொய்யா வித்து ஆகிவிடும். 72
தேவர் அனையர், புலவரும்; தேவர்
தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர்,
கற்றாரைக் காதலவர். 73
தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்,
'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார்,
'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான்,
'தா' எனின், தாயம் வகுத்து! 74
நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும்
கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து,
எண்ணினான் எண்ணப்படும். 75
சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்;
தாவாத இல்லை, வலிகளும்; மூவா
இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல். 76
சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற
நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண்
மகிழான் அறிப, நறா. 77
நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,
மாறு உள் நிறுக்கும் துணிபு? 78
கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,
உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,
கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,
வெகுளி கெடுத்துவிடல். 79
நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;
குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;
வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்
பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு. 80
நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ் ஊரும் ஊர். 81
கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள். 82
நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும். 83
ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்
அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்
நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,
கேளிர் ஒரீஇவிடல். 84
கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;
தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும், பகை. 85
பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து!
தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!
அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,
செல்லா இடத்துச் சினம். 86
மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும், களிறு. 87
மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண். 88
பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,
பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,
சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,
கொன்றான்மேல் நிற்கும், கொலை. 89
வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்ற
மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்
கயம் பெருகின், பாவம் பெரிது. 90
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;
வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம்,
தமர் அல்லார் கையகத்து ஊண். 91
எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்
கல்லா வளரவிடல் தீது; நல்லார்
நலம் தீது, நாண அற்று நிற்பின்; குலம் தீது,
கொள்கை அழிந்தக்கடை. 92
ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல். 93
கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை
பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை
கள்வன் அறிந்துவிடும். 94
வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்
சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய
பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும். 95
வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின். 96
மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;
பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும். 97
எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,
பண்பு உடையாள் இல்லா மனை. 98
ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,
உரன் சிறிதுஆயின், பகை. 99
அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம். 100
மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-
தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,
ஓதின், புகழ் சால் உணர்வு. 101
மிகைப் பாடல்கள்
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 1
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல். 2
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். 3
முனியார், அரிய முயல்வார்; அவரின்
முனியார், அறம் காமுறுவார்; இனிய
இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு
உயங்கார், அறிவுஉடையார். 4

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- பழமொழி நானூறு
முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி நானூறு
இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. பாடல் தொதையைக் கொண்டு, "பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். பழமொழி பாடலின் இறுதியில் வருகின்றது. முன் இரண்டு அடிகளில் அதற்கு உரிய விளக்கத்தைக் காணலாம். மூன்றாம் அடியில் பெரும்பாலும் ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலைத் தொடர்களுள் ஒன்று இடம் பெறுகிறது. முன்றுறை அரையனார் என்ற பெயர் இயற்பெயர் என்று எண்ணுதற்கு இடமில்லை. முன்றுறை என்னும்இடத்தில் அரசு புரிந்த அரசர் என்பதே இதன் பொருளாகும். "முன்றுறை மன்னவன்" என்பது தற்சிறப்புப் பாயிரத்துள் காண்கிறது. மேலும் "அரையர்" என்பது ஒரு மரபுப் பெயராகவோ குடிப் பெயராகவோ இருத்தலும் கூடும். முன்றுறை எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர் சமண சமயத்தினர் என்பது தற்சிறப்புப் பாயிரத்தால் விளங்கும்.
தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.
கடவுள் வணக்கம்
அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.
நூல்
1. கல்வி
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை,
மரம் போக்கிக் கூலி கொண்டார். 1
சொற்றொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கற்றொறும், "கல்லாதேன்" என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,
கற்றொறும் தான் கல்லாத வாறு. 2
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். 3
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு
வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால்,
ஆற்று உணா வேண்டுவது இல். 4
"உணற்கு இனிய இந் நீர் பிறிதுஉழி இல்" என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின், கேட்டலே நன்று. 5
"உரை முடிவு காணான்; இளமையோன்!" என்ற
நரை முது மக்கள் உவப்ப-நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை
கல்லாமல் பாகம் படும். 6
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க
பூம் புனல் ஊர்!-பொது மக்கட்கு ஆகாதே;
பாம்பு அறியும் பாம்பின கால். 7
நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில். 8
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட!
நிறை குடம் நீர் தளும்பல் இல். 9
விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்,
கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி,
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,-
மதிப்புறத்துப் பட்ட மறு. 10
2. கல்லாதார்
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை- எற்றேல்,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. 11
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால் - நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,
கனா முந்துறாத வினை. 12
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்
'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-
சொல்லாக்கால் சொல்லுவது இல். 13
கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன்
சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம்
இவர் வரை நாட!-தமரை இல்லார்க்கு
நகரமும் காடு போன்றாங்கு. 14
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்!
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. 15
கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்
சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்று எனின்
தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,
யானையோடு ஆடல் உறவு. 16
3. அவையறிதல்
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால்
வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர், அவை. 17
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா
பெரு வரை நாட! சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய். 18
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு. 19
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி
பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடு
தேவரும் ஆற்றல் இலர். 20
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,
புகல் அறியார் புக்கு, அவர் தாமே - இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ,
பாண் சேரிப் பல் கிளக்கும் ஆறு. 21
மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்
யானைப் பல் காண்பான் புகல். 22
அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, - கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல். 23
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்
புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்
புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,
இடைக் கலத்து எய்துவிடல். 24
நடலை இலர் ஆகி நன்று உணராராய
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்,
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று. 25
4. அறிவுடைமை
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின். 26
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்,
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்
பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
காய்கலா ஆகும் நிலா. 27
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!
கற்றறிவு போகா கடை. 28
ஆணம் உடைய அறிவினார் தம் நலம்
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,-
மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர்,
யானையால் யானை யாத்தற்று. 29
தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார்,
பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற
விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப
அரிவாரைக் காட்டார் நரி. 30
பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது. 31
பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். 32
அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும்,
திரு உடையராயின், திரிந்தும்-வருமால்
பெரு வரை நாட! பிரிவு இன்று, அதனால்
திருவினும் திட்பம் பெறும். 33
5. ஒழுக்கம்
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர்!-அஃதன்றோ
நெய்த்தலைப் பால் உக்கு விடல். 34
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரையை!-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர் உடும்பு. 35
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நடஅத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல். 36
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால்,
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்,
ஓர்த்தது இசைக்கும் பறை. 37
தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம்
எங்கெங்கும் தீர்த்ததற்கு இடை புகுதல்-எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது,
அயல் வளி தீர்த்து விடல். 38
கெடுவல் எனப்பட்டக் கண்ணும், தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும்; தேயாது, சொல். 39
பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி-மருந்தின்
தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப!
பிணி ஈடு அழித்து விடும். 40
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவா,
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி
இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!
பெரும் பழியும் பேணாதார்க்கு இல். 41
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,
'கோவிற்குக் கோவலன்' என்று, உலகம் கூறுமால்
தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல். 42
6. இன்னா செய்யாமை
பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்' எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,
நோவச் செயின், நோயின்மை இல். 43
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 44
'ஆற்றார் இவர்' என்று, அடைந்த தமரையும்,
தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கவ்வி விடும். 45
நெடியது காண்கலாய்; நீ ஒளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற;-அடியுளே,
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும். 46
'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால்,
ஆற்றாது அவர் அழத கண்ணீர் அவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும். 47
'மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை
ஒற்கப்பட முயறும்' என்றல் இழுக்கு ஆகும்;-
நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல்
கல் கிள்ளி, கை உயர்ந்தார் இல். 48
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,
கூர்ந்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;-
பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,
பேர்த்து நாய் கவ்வினார் இல். 49
காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல். 50
7. வெகுளாமை
இறப்பச் சிறயவர் இன்னா செயினும்,
பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு. 51
'ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை' என்ப;-ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது. 52
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
நெல்செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
தற் செய்ய, தானே கெடும். 53
எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாராக் கொண்டு விடுமர்மன்; அஃதால்
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல். 54
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,
பரியாதார் போல இருக்க - பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க் கூட்டுவார். 55
கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக,
பொய்யாகத் தம்மைப் பொருள் அல்லார் கூறுபவேல்,-
மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப,
செய்யாத எய்தா எனில். 56
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல். 57
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்க லாகாதார்,
நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,-
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ,
தீ இல்லை ஊட்டும் திறம். 58
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்;-ஒறுத்து ஆற்றின்,
வான் ஓங்கு உயர் வரை வெற்ப! பயம் இன்றே
தான் நோன்றிட வரும், சால்பு. 59
8. பெரியாரைப் பிழையாமை
அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று;
சிறியர் எனப்பாடும் செய்யும்;-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த,
என்று ஊடு அறுப்பினும், மன்று. 60
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்ற
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,-
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாமா கண் காணாத வாறு. 61
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரைக்,
கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,-
நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல். 62
முன்னும் ஒரு கால் பிழைப்பானை ஆற்றவும்,
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசை
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ,
வாழை இரு கால் குலை? 63
நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு,
நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;-
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே,
கொடும்பாடு உடையான் குடி. 64
9. புகழ்தலின் கூறுபாடு
செய்த கருமம் சிறிதானும் கைகூடா;
மெய்யா உணரவும் தாம் படார்; எய்த
நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப்
புள் அரைக்கால் விற்பேம்' எனல். 65
தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின்,
அமராததனை அகற்றலே வேண்டும்;-
அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம். 66
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல். 67
பல் கிளையுள் பார்த்துறான் ஆகி, ஒருவனை
நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,
உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,
நிரையுள்ளே இன்னா, வரைவு. 68
10. சான்றோர் இயல்பு
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர். 69
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி. 70
மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல்,
பீடு இலாக்கண்ணும், பெரியோர் பெருந் தகையர்;-
ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. 71
இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,
உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு
அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும்,
மணி மணியாகி விடும். 72
கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார்,
மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லால்;
பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். 73
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்,
தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின்,
நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!
அறி மடமும் சான்றோர்க்கு அணி. 74
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்,
உரைத்தால், உரை பெறுதல் உண்டு. 75
'எனக்குத் தகவு அன்றால்' என்பதே நோக்கி,
தனக்குக் கரி ஆவான் தானாய், - தவற்றை
நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
எனச் செய்யார், மாணா வினை. 76
தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை,- ஏய்ப்பார் முன்
சொல்லோடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே-
வில்லொடு காக்கையே போன்று. 77
மடங்கிப் பசிப்பினும், மாண்புடை யாளர்,
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்-குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!
கடலொடு காட்டு ஒட்டல் இல். 78
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,-
மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு. 79
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,
ஒன்றும், சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்-
குன்றின்மேல் இட்ட விளக்கு. 80
11. சான்றோர் செய்கை
ஈட்டிய ஒண் பொருள் இன்றெனினும், ஒப்புரவு
ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும்
போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,
ஏற்றுக் கன்று ஏறாய் விடும். 81
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்,
'இடம் கண்டு அறிவாம்' என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வார் கடன். 82
மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?-
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய். 83
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை
மாண்டிலார் என்றே மறுப்பக் கிடந்ததோ?
பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட
பறை அறையாப் போயினார் இல். 84
பரியப் படுபவர் பண்பு இலரேனும்,
திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப்
பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ,
ஊர் அறிய நட்டார்க்கு உணா? 85
தெற்றப் பகைவர் இடர்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்
அவைப்படின், சாவாது பாம்பு. 86
'இறப்ப எமக்கு ஈது இழிவரவு!' எண்ணார்,
பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே-
தால அடைக்கலமே போன்று. 87
பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல்-எறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு. 88
சிறியவர் எய்திய செல்வத்தின், நாண
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்
முது நெய் தீது ஆகலோ இல். 89
12. கிழ்மக்கள் இயல்பு
மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும்,
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க
இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும்,
மன நல ஆகாவாம் கீழ். 90
'தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்' என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல். 91
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?-
மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ,
நந்து உழுத எல்லாம் கணக்கு. 92
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 93
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு உறுதி மொழியற்க!-மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே,
உண்டது நீலம் பிறிது. 94
தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே ஆயினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே,
தேவரே தின்னினும் வேம்பு. 95
காடு உறை வாழ்க்கைக் கரு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும்
கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்
செய் உளது ஆகும், மனம். 96
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே,
தின்பது அழுவதன் கண். 97
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே
துடும்பல் எறிந்து விடல். 98
மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,-
ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக்
காணாக் களிக்கும், களி. 99
உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும்,
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,-
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!
முழம் குறைப்பச் சாண் நீளூமாறு. 100
அல்லவை செய்ப, அலப்பின்; அல்வாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைந்து எழுவர்;-
கல்லாக் கயவர் இயல்போல்;-நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல். 101
கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,
கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?-
ஊர் அறியா மூரியோ இல். 102
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;-
மரம் பயில் சோலை மலை நாட!-என்றும்
குரங்கினுள் நன் முகத்த இல். 103
ஊழாயினாயிரைக் களைந்திட்டு, உதவாத
கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும்
தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து,
காஞ்சிரை நட்டு விடல். 104
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல்,-பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர்!-அது அன்றோ,
நாய்மேல் தவிசு இடும் ஆறு. 105
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,
ஆசறு செய்யாராய், ஆற்றப் பெருகினும்,
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார், குடி. 106
13. கீழ்மக்கள் செய்கை
நெறியால் உணராது, நீர்மையும் இன்றி,
சிறியார், 'எளியரால்!' என்று,-பெரியாரைத்
தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்-
திங்களை நாய் குரைத்தற்று. 107
'மறுமை ஒன்று உண்டோ ? மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்' என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
இட்டிகை தீற்று பவர். 108
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக
நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,-
எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து
உண்ணி பறித்துவிடல். 109
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,
'வருந்தினார்' என்றே வயப்படுவது உண்டோ ?
அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக் கண்ணும்,
பொருந்தா மண், ஆகா, சுவர். 110
குலத்துச் சிறயார், கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து
நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்
தலை கீழாக் காதிவிடல். 111
சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து,
அச்சாணி தாம் கழிக்குமாறு. 112
நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களைப் பேணி,
ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்-
புழுப் பெய்து புண் பொதியுமாறு. 113
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதைகள்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!-
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும். 114
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்,
மூக்கு அற்றதற்கு இல், பழி. 115
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல். 116
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக்
கள்ளராச் செய்குறு வார். 117
செய்த கொடுமை உடையான், அதன் பயம்
எய்த உரையான், இடரினால்;-எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல். 118
முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும்
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!-
மன்றத்து மையல் சேர்ந்தற்று. 119
தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,
கரப்புடை உள்ளம் கனற்று பவரே-
செருப்பிடைப் பட்ட பரல். 120
உறு மக்கள் ஆக ஒருவனை நாட்டி,
பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே,
குறுமக்கள் காவு நடல். 121
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,
நிரை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,-
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே,
சுரை ஆழ, அம்மி மிதப்பு. 122
தேர்ந்து, கண்ணோடது, தீவினையும் அஞ்சலராய்,
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு. 123
14. நட்பின் இயல்பு
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா,
கட்டங்கம் வெல் கொடி கொண்டானும், கொண்டானே;-
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே,
நட்டாரை ஒட்டியுழி. 124
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. 125
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே,
பேஎயோ டானும் பிரிவு. 126
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்
முனியார் செயினும், மொழியால் முடியா;-
துணியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
பனியால் குளம் நிறைதல் இல். 127
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா;
யார் நட்பே ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;-
கானாட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ,
நாய், நட்டால், நல்ல முயல். 128
'தீர்ந்தேம்' எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்
பழமை கந்து ஆக, பரியார், புதுமை;-
முழ நட்பின், சாண் உட்கு நன்று. 129
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?
விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார்,
இழித்தக்க காணின், கனா. 130
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,
கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;-
பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ,
தம் கன்று சாக் கறப்பார். 131
தம் தீமை இல்லாதார், நட்டவர் தீமையையும்,
'எம் தீமை' என்றே உணர்ப, தாம்;-அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு. 132
தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்ற
அறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார்
மறையார், மருத்துவர்க்கு நோய். 133
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்,
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;-
கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து,
கெட்டார்க்கு நட்டாரோ இல்! 134
15. நட்பில் விலக்கு
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்,
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பராய்
எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும்,
உண்ணும் துணைக் காக்கும், கூற்று. 135
'எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர்- பைத்தொடீஇ!
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு. 136
பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே-
கழி விழாத் தோள் ஏற்றுவார். 137
'இடையீடு உடையார் இவர் அவரோடு' என்று,
தலையாயார் ஆராய்ந்தும் காணார்; கடையாயர்
முன் நின்று கூறும் குறளை தெரிதலால்,-
பின் இன்னா, பேதையார் நட்பு. 138
தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால்,
நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆயினென்,-
மான் மானும் கண்னால் மறந்தும் பரியலரா
கானகத்து உக்க நிலா. 139
கண்டு அறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேபோல்,
விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ,
விண்டற்கு விண்டல் மருந்து. 140
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று,
திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே,
இரு தலைக் கொள்ளி என்பார். 141
16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல்
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு. 142
'யாம் தீய செய்த மலை மறைத்தது' என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாராய் ;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!
கணையிலும் கூரியவாம் கண். 143
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு; அஃதேபோல்,
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;-
ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். 144
நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி
நோக்கி, அறிய அதுவேபோல் - நோக்கி,
முகன் அறிவார் முன்னம் அறிய; அதுவே,
மகன் அறிவு தந்தை அறிவு. 145
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறம் அரிதால்;-தேமொழி-ஆரும்
குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
புலப் புல வண்ணத்த, புள். 146
காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
'மேய்ப்பு ஆட்டது' என்று உண்ணாள் ஆயினாள்-தீப் புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும். 147
முயலவோ வேண்டா; முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!-
கயல் இகல் உண் கண்ணாய்!-கரியரோ வேண்டா;
அயல் அறியா அட்டூணோ இல். 148
17. முயற்சி
'எமக்குத் துணையாவார்?' வேண்டும் என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம். 149
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையோனே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன். 150
வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து
வாள் ஆண்மையாலும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று. 151
'ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்'
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது,
சென்றது, பேரா தவர். 152
'இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?
தனியேம் யாம்!' என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;
முனிவு இலராகி முயல்க!-முனிவ்ல்லார்
முன்னியது எய்தாமை இல். 153
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும். 154
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண். 155
'எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை' என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க!- எங்கானும்
நன்கு திரண்டு பெரயவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள். 156
நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,
உலக்கைமேல் காக்கை என்பார். 157
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக்கொண்டு,
கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது
உக்கு ஓடிக் காட்டிவிடும். 158
தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கல்லார்,
'பின்னை, ஒருவரால் செய்வித்தும்' என்று இருத்தல்,-
செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ. 159
'முழுதுடன் முன்னே வகுத்தவன்' என்று,
தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ, அல்லல்-
இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்
எழுதினான் ஓலை பழுது. 160
முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது
ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற
வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள்
இல்லதற்கு இல்லை, பெயர். 161
18. கருமம் முடித்தல்
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே-
வெந் நீரில் தண்ணீர் தெளித்து. 162
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப் பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார். 163
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க!-
வரையக நாட!-விரைவ்ற், கருமம்
சிதையும்; இடர் ஆய்விடும். 164
'நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்' என்று, ஒன்று
உளைய உரையாது, உறுதியே கொள்க!-
வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து,
தொளை எண்ணார், அப்பம் தின்பார். 165
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது-
கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்,
அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. 166
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும்;-கொடி அன்னாய்!-
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,
மூரி உழுது விடல். 167
ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றாண்டும்
பாணித்தே செய்ய, வியங்கொள்ளின் - காணி
பயவாமல் செய்வார் ஆர்? தம் சாகாடேனும்
உயவாமல் சேறலோ இல். 168
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,
முட்டாது அவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
தட்டாமல் செல்லாது, உளி. 169
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, 'அவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கு!' என்று அமர்ந்து இருத்தல்,-
மாப்புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக்
காப்பிடுதல், புன் மீன் தலை. 170
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
மற்றதன்பால் தேம்பல் நன்று. 171
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்
கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,-
இழவு அன்று, எருது உண்ட உப்பு. 172
கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின்,
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!-
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே,
அட்டாரை ஒட்டாக் கலம். 173
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,
'காட்டி, களைதும்' என வேண்டா;-ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல். 174
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,
இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து,
நினைத்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,
'நனைந்து வா' என்று விடல். 175
உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம்,
புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்-
நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு,
கரை இருந்தார்க்கு எளிய, போர். 176
19. மறை பிறர் அறியாமை
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும்,
சீர்ந்தது செய்யாதார் இல். 177
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் - தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்
பறைக்கண் கடிப்பு இடுமாறு. 178
அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க! - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு,
புல்வாய் வழிப்படுவார் இல். 179
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;-
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர்
கயவர்க்கு உரையார், மறை. 180
பெரு மலை நாட!-பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. 181
விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்
முறிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;-
அளிந்தார்கண் ஆயினும், ஆராயான் ஆகித்
தெளிந்தான் விரைந்து கெடும். 182
20. தெரிந்து தெளிதல்
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய். 183
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?-
கற்பால் கலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோரா தாரோ இலர். 184
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு
வேந்தர் வினாயினான், மாந்தரை - சான்றவன்,
கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்! 185
ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,
இருவரிடை நட்பான் புக்கால், பெரிய
வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்
குறுக் கண்ணி ஆகிவிடும். 186
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,
தினைத் துணையேயானும் அணிக் கோடல் நன்றே
இனக் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப!
பனைப் பதித்து, உண்ணார் பழம். 187
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;
சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!
இனம் கழு ஏற்றினார் இல். 188
கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,
நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தோடு
பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே-
நீர் குறிதாகப் புகல். 189
சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார்,
பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்,
கிடப்புழியும் பெற்றுவிடும். 190
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?-
புன் சொல் இடர்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல். 191
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,
பொய்ந் நீரர் ஆகிய பொருளை முடிப்பார்க்கும்,
எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர்
தம் நீரர் ஆதல் தலை. 192
யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,
தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை
படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும். 193
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,-
அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி,
மயில் போலும் கள்வர் உடைத்து. 194
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது
நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்
நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதே
ஓடுக, ஊர் ஓடுமாறு! 195
21. பொருள்
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது. 196
ஒல்லாது வ்ன்றி, உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!-
கடலுள்ளும் காண்பவே, நன்கு. 197
அருமையுடைய பொருள் உடையார், தங்கண்
கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல்
நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு,
தேரை வழிச் சென்றார் இல். 198
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;-
பொரு படைக் கண்ணாய்!-அதுவே, திரு உடையார்
பண்டம் இருவர் கொளல். 199
உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே
உடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின்,
புதற்குப் புலியும் வலியே; புலிக்குப்
புதலும் வலியாய்விடும். 200
வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின்,
பெரு வாய்த்தாய் நிற்கும், பெரிதும்;-ஒருவாறு
ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்;
துளி ஈண்டில், வெள்ளம் தரும். 201
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்,
எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. 202
களமர் பலராமனும் கள்ளம் படினும்,
வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளைநெல்
அரிநீர் அணை திறக்கும் ஊர்!-அறுமோ,
நரி நக்கிற்று என்று கடல்? 203
நாடு அறியபபட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து
வாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி,
வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும்,
புலித் தலை நாய் மோத்தல் இல். 204
22. பொருளைப் பெறுதல்
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!-
அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று! 205
மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
இறந்தது பேர்த்து அறிவார் இல். 206
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்,
இமையாது காப்பினும் ஆகா; இமையோரும்
அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையால்,
நல் காப்பின் தீச் சிறையே நன்று. 207
ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,
'நோக்குமின்!' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,-
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!-
காக்கையைக் காப்பு இட்ட சோறு. 208
தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!-
மூரியைத் தீற்றிய புல். 209
முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன்னியல்
மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு. 210
'கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்' என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;-
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!-
கடம் பெற்றான் பெற்றான் குடம். 211
கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, 'தம்மினே' என்றால், தொடங்கிப்
பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும். 212
23. நன்றியில் செல்வம்
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
ஆவதே போன்று கெடும். 213
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு. 214
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,
கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா
வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!-
மரம் குறைப்ப மண்ணா, மயிர். 215
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம். 216
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,
'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு. 217
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை
அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? 218
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்
தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,-
அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,
மீ வேலி போக்குபவர். 219
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,-
இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து. 220
வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல். 221
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்துவிடல். 222
அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால்,
இடையன் எறிந்த மரம். 223
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,
பள்ளியுள் ஐயம் புகல். 224
இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம்,
வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,
பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின்,
நசை கொன்றான் செல் உலகம் இல். 225
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு. 226
24. ஊழ்
எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்!-குறும்பு, இயங்கும்
கோப்புக்குழி, செய்வது இல். 227
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய, கருமம் அதனால்,-
அறிவினை ஊழே அடும். 228
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி,
அறைப் பாய் அருவி அணி மலை நாட!-
உறற்பால யார்க்கும் உறும். 229
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டா விடுதல் அரிது. 230
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை,
ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப்
படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்-
தொடற்பாலார்கண்ணே தொடும். 231
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?-
முதல் இலார்க்கு ஊதியம் இல். 232
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும். 233
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம். 234
'இது மன்னும் தீது' என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும்;-மது மன்னும்
வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!-
தீ நாள் திரு உடையார்க்கு இல். 235
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,
வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;
தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி. 236
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்;
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;-
ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல். 237
'பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை
இன்று ஒறுக்கின்றது' என வறியார், துன்புறுக்கும்
மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!-
ஏவலாள் ஊரும் சுடும். 238
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால்,
செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை,
உயிர் உடையார் எய்தா வினை. 239
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி,
வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!-
ஊழ் அம்பு வீழா, நிலத்து. 240
25. அரசியல்பு
'எம் கண் இனையர்' எனக் கருதின், ஏதமால்;
தங்கண்ணேரானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு. 241
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல். 242
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,
இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து
நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம்
நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. 243
பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்
அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,
கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,
வண்டு தாது உண்டுவிடல். 244
பாற்பட்டு வாழ்ப எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டாவாம்
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல். 245
அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறுத்து வாயில் இடல். 246
வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு
படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம். 247
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதும்;
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதார் இல். 248
மறு மனத்தன் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தன் ஆகி ஒழுகின்,-செறு மனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?-
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். 249
அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும்,
செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால்,
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்;
தண் கோல் எடுப்புமாம் மொய். 250
மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!-
மரத்தின் கீழ் ஆகா, மரம். 251
வழிப்பட்டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என்,
மெல்ல கவுள் கொண்ட நீர். 252
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு. 253
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,-
முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என்,
வல்லை, அரசு ஆட்கொளின்? 254
உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை,
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்துவிடல். 255
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், 'உலகு ஆண்டும்!' என்பவர்;
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையுள் கூழ்-மரமே போன்று. 256
பொலந் தார் இராமன் துணையாகப் தான்போந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
போந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல். 257
26. அமைச்சர்
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை. 258
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல். 259
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட
சுரையாழ் நரம்பறுத் தற்று. 260
நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின்
வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப்
புல்லம் புறம் புல்லுமாறு. 261
மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை
அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து,
ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனில்,
சென்று படுமாம், உயிர். 262
செயல் வேண்டா நல்லன செய்விக்கும்; தீய
செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்-
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,-
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். 263
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவு உடையார் அவ்வியமும் செய்வர்;-வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. 264
தீயன அல்ல செயினும், திறல் வேந்தன்
காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும்
புலி முன்னம் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே,
வலி முன்னர் வைப் பாரம் இல். 265
27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல். 266
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டல், 'யாம் ஒன்றும்
பெற்றிலேம்' என்பது பேதைமையே; மற்று அதனை
எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
'செய்க!' என்றான், 'உண்க!' என்னுமாறு. 267
'எமர் இது செய்க, எமக்கு!' என்று, வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு
வேலின்வாய் ஆயினும்,வீழார்; மறுத்து உரைப்பின்,-
'ஆல்' என்னின் 'பூல்' என்னுமாறு. 268
விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது,
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,-
மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!-
கடல் படா எல்லாம் படும். 269
உவப்ப உடனபடுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தால்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின்,
தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். 270
செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தார்,
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?-
உருத்த சுணங்கின் ஒளியிழாய்!-கூரிது,
எருத்து வலியநன் கொம்பு. 271
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த
நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும். 272
ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!-
பூண்டாங்கு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும். 273
காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன்
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்-
ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப,
தாய் அணல் தான் சுவைத்தற்று. 274
சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை;
விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்,
புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். 275
இடு குடைத் தேர் மன்னர், 'எமக்கு அமையும்' என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு,
முடிதல் எனைத்தும் உணரா முயறல்,-
கடிய கனைத்துவிடல். 276
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்,
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும்,
இளைத்து அன்று பாம்பு இகழ்வார் இல். 277
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவே
எருத்திடை வைக்கோல் தினல். 278
பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,
இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்
பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத்
தன் நாரால் யாத்துவிடல். 279
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்,
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி,
பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர்,
தம் மேலே வீழப் பனை. 280
வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,
நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;-
என் செய்து அகப்பட்டக் கண்ணும், எடுப்புபவோ,
துஞ்சு புலியைத் துயில்? 281
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?-
ஆமா உகளும் அணி வரை வெற்ப!-கேள்;
ஏமாரார் கோங்கு ஏறினார். 282
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்,
பொறாஅன் போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு. 283
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,
ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்-
ஆடு பணைப் பொய்க் காலே போன்று. 284
28. பகைத்திறம் தெரிதல்
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?-
மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண். 285
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது எதிர்த்து,
நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீரத்
தனி மரம் காடு ஆவது இல். 286
'முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தோரைப்
பின் நலிதும்' என்று இருத்தல் பேதைமையே; பின் சென்று,-
காம்பு அன்ன தோளி!-கடிதிற் கடித்து ஓடும்
பாம்பின் பல் கொள்வாரோ இல். 287
நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையும்
வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,-
கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால்,
அடி கெட மன்றி விடல். 288
தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்
சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக் கண்ணும்
உவர் நிலம் உட்கொதிக்குமாறு. 289
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை,
'அகம் புகுதும்!' என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்
ஒக்கலை வேண்டி அழல். 290
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க!
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும், கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல். 291
பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா,
சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின்,
தீ நாய் எடுப்புமாம் எண்கு. 292
இகலின் வலியாரை எள்ளி, எளியார்,
இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய்,
என் செய்தே ஆயினும் உய்ந் தீக!-சாவாதான்
முன்கை வளையும் தொடும். 293
வென்று அடுகிற்பாரை வெப்பித்து, அவர் காய்வது
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்-
குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று. 294
'உரைத்தவர் நாவோ பருந்து எறியாது' என்று,
சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால்,
இழைத்தது இகவாதவரைக் கனற்றி,
பலிப் புறத்து உண்பர் உணா. 295
தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,
கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டு ஒழுகல் வேண்டா;-
பழம் பகை நட்பு ஆதல் இல். 296
வெள்ளம் பகை யெனினும், வேறு இடத்தார் செய்வது என்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு-
புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ,
அள் இல்லத்து உண்ட தனிசு. 297
இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,
தம்மைப் பிரியார் தமரா அடைந்தாரின்,
செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?-
மைம்மைப்பின் நன்று, குருடு. 298
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,-
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே,
அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. 299
வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார்,
புன் பாட்டவர் பகை கோடல் பயன் இன்றே;-
கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!-
வெண் பாட்டம் வெள்ளம் தரும். 300
வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,
வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,
பொறுவரு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால்,
உருவு திரு ஊட்டுமாறு. 301
வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி,
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,-
புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!-
வலி அலாம் தாக்கு வலிது. 302
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல். 303
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்
பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,
நாய் பின்னதாகத் தகர். 304
யானும் மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,
ஈனம் செயக் கிடந்தது இல் என்று, கூனல்
படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே-
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. 305
இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே
அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால்
கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே
சிறு குரங்கின் கையால் துழா. 306
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால், மற்றவர்க்கு
ஆற்றும் பகையால் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டுவிடும். 307
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,
முள்ளினால் முள் களையும் ஆறு. 308
நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்,
மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,-
பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!-
ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. 309
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல்,
அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால்
நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால்,
ஒடி எறியத் தீரா, பகை. 310
29. படைவீரர்
தூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர். 311
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். 312
ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து,
ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள்
வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமைச் சாக்காடு எழல். 313
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,
'போர் ஏற்றும்' என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?
யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,
ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. 314
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,
தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க!-களிப்பினும்
சோரப் பொதியாத வாறு. 315
உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்
பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. 316
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும்,
நிகர் அன்றிமேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ,
கல்லொடு கை எறியுமாறு. 317
'வரை புரை வேழத்த, வன் பகை' என்று அஞ்சா
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!-
திரை அவித்து, ஆடார் கடல். 318
காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,
பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல். 319
இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும்,
அஞ்சி அகப்படுவார், ஆற்றாதார்;-அஞ்சி
இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள்
இருளின் இருந்தும் வெளி. 320
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே-
கருக்கினால் கூறை கொள்வார். 321
'அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்' என்று,
தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே-
மகன் மறையாத் தாய் வாழுமாறு. 322
உறுகண் பலவும் உணராமை கந்தா,
தறுகண்மை ஆகாதாம் பேதை, 'தறுகண்
பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது' என்று எண்ணி,
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. 323
தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாதான்,
என்ன குறையன், இளையரால்?-மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால். 324
கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று. 325
இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
'தருக!' என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். 326
30. இல்வாழ்க்கை
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய
ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!-
வித்து இன்றிச் சம்பிரதம் இல். 327
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு,
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து. 328
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்,
புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை
உண்டி வினவுவார் இல். 329
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து
இடர் இன்றி ஏமாந்திருந்தாரே, நாளும்
கடலுள் துலாம் பண்ணினார். 330
எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச்
செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி-
மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும்,
தான் செய்த பாவை தனக்கு. 331
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு. 332
தொடித் தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது. 333
விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும்; தொழுதையுள்,
மாலையும் மாலை மறுக்குறுத்தாள்;-அஃதால்,
சால்பினைச் சால்பு அறுக்குமாறு. 334
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,
தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்
ஊர் மிகின், இல்லை, கரியோ;-ஒலித்து உடன்
நீர் மிகின், இல்லை, சிறை. 335
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ-
வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல். 336
நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,
செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா, ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி
குறங்கு அறுப்பச் சோரும் குடர். 337
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன
கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்
ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு. 338
தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;
செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே-
நுகத்துப் பகல் ஆணி போன்று. 339
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,
கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;
'நிலைப் பொருள்' என்று அதனை நீட்டித்தல் வேண்டா;-
புலைப் பொருள் தங்கா, வெளி. 340
நன்றே, ஒருவர்த் துணையுடைமை; பாப்பு இடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும்
குன்றகல் நல் நாட!-கூறுங்கால், இல்லையே,
ஒன்றுக்கு உதவாத ஒன்று. 341
விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி,
கற்று அடியுள் ஆழ்ந்துவிடல். 342
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,
அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்
உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார்,
தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். 343
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல். 344
'தமன்' என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்,
'நமன்' என்று, காயினும், தான் காயான், மன்னே,
'அவன் இவன்' என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே,
நம நெய்யை நக்குபவர்? 345
நாடி, 'நமர்' என்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல்,-கிளர் மணி
நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த
கோடு குறைத்து விடல். 346
'பண்டு இன்னார்' என்று தமரையும், தம்மையும்,
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்,
விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ,
உண்ட இல் தீ இடுமாறு. 347
31. உறவினர்
தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?-
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!-
உமிக் குற்றுக் கை வருந்துமாறு. 348
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். 349
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல
வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே
மனை மரம் ஆய மருந்து. 350
மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?-
மை ஆர் இருங்கூந்தல் பைந்தொடி!-எக்காலும்
செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம்,
பெய்யாது எனினும், மழை. 351
முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால்,
பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;
பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!-
துன்னினார் அல்லர், பிறர். 352
உளைய உரைத்து விடினும், உறுதி
கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள்
பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!-
தாய் மிதித்த ஆகா முடம். 353
தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால்,
என்ன படினும், அவர் செய்வ செய்வதே;-
இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி
போம் வழிப் போகும், இழை. 354
கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ, துன்பம்;-
பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல்
திருவொடும் இன்னாது, துச்சு. 355
பாரதத் துள்ளும், பணையம் தம் தாயமா,
ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு
ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால்,
காதலரொடு ஆடார் கவறு. 356
32. அறம் செய்தல்
சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே,
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. 357
வைத்தனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்யின்-அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது. 358
மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல்,
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல். 359
ஈனுலகத்துஆயின், இசை பெறுஉம்; அஃது இறந்து,
ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி. 360
மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை
ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,
நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,
நாய் காணின் கல் காணாவாறு. 361
தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அது ஆனால்,
'மிக்க வகையால் அறம் செய்!' என, வெகுடல்,-
அக்காரம் பால் செருக்குமாறு. 362
உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்-
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல். 363
அறம் செய்பவர்க்கும், அறவுழி நோக்கி,
திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;-
புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய,
அல்லவை நீங்கி விடும். 364
தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால்,
ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி,
அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து,
துஞ்சு வருமே, துயக்கு! 365
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம்,
முட்டு உடைத்தாகி, இடை தவிர்ந்து வீழ்தலின்,
நட்டு அறான் ஆதலே நன்று. 366
பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச்
சில நாள் சிறந்தவற்றால் செய்க!-கலை தாங்கி
நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம்
செய்வது செய்யாது, கேள். 367
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்,
நோக்கப் படினும், உணங்கலைப் புள் கவரும்;-
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண் பொருட்கும்
காப்பாரின் பார்ப்பார் மிகும். 368
இன்றி அமையா இரு முது மக்களைப்
பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்
குன்று, வழி அடுப்பது இல். 369
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்-
முயல் விட்டுக் காக்கை தினல். 370
இம்மைத் தவமும், அறமும், என இரண்டும்,
தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்,
இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும்,
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. 371
33. ஈகை
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருது வாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர். 372
கரப்புடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
சுரத்திடைப் பெய்த பெயல். 373
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே
வளம் நெடிது கொண்து அறாஅது;-அறுமோ,
குளம் நெடிது கொண்டது நீர்? 374
'நினைத்தது இது' என்று, அந் நீர்மையை நோக்கி,
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!-
கடிஞையில் கல் இடுவார் இல். 375
கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;-
வாய்ப்பத் தான் வாடியக் கண்ணும், பெருங் குதிரை,
யாப்புள், வேறு ஆகிவிடும். 376
அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தாரை, கொண்டார்,
படுத்து, 'ஏழையாம்!' என்று போகினும் போக!-
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும்
கொடுத்து, ஏழை ஆயினார் இல். 377
'இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்' என்று எண்ணி,
கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
இறைத்தோறும் ஊறும் கிணறு. 378
'இரவலர் தம் வரிசை' என்பார், மடவார்
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-
நீர் வரையவாம் நீர் மலர். 379
தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர,
'அடுத்தர' என்றாற்கு, 'வாழியரோ!' என்றான்;
தொடுத்து, 'இன்னர்' என்னலோ வேண்டா;-கொடுப்பவர்
தாம் அறிவார், தம் சீர் அளவு. 380
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்,
பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள்
பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;-
ஒன்று உறா முன்றிலோ இல். 381
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய
மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை
மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?-
பெண் பெற்றான் அஞ்சான், இழவு. 382
பயன் நோக்காது, ஆற்றவும் பார்த்து அறிவு ஒன்று இன்றி,
இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!-
கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு. 383
மறாஅ தவனும், பலர் ஒன்று இரந்தால்,
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
இரந்து ஊட்குப் பன்மையோ தீது. 384
தோற்றம் பெரிய நசையினார், அந் நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றுள்
கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால்,
உயவுநெய்யுள் குளிக்குமாறு. 385
காப்பு இகந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்
கோப் பரியான் கொள்ளக், கொடுத்து இராது என் செய்வர்?
நீத்த பெரியார்க்கே ஆயினும், மிக்கவை
மேவின், பரிகாரம் இல். 386
34. வீட்டு நெறி
எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை. 387
அடங்கி, அகப்பட்ட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே-
கொல்லிமேல் கொட்டு வைத்தார். 388
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் துடியிடை யார்ப் படர்ந்து, ஒட்டித்
தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்? 389
இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார்,
நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியாதவரே-
இரு தலையும் காக் கழித்தார். 390
வளமையும், தேசும், வலியும், வனப்பும்,
இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா,
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல். 391
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது
கும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும். 392
செல்வத் துணையும், தம் வாழ்நாள் துணையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,-
முள்ளித் தேன் உண்ணுமவர். 393
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவை
என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!
இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே
பல் கட்டு, அப் பெண்டிர், மகார். 394
சிறந்த தம் மக்களும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடரப்பாடு எவன் கொல்,-கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு. 395
எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட
வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும்,
கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே,
குழிப் புழி ஆற்றா குழிக்கு. 396
திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக
எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால்,
சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்,
நீர் அற, நீர்ச் சார்வு அறும். 397
ஓத நீர் வேலி உலகத்தார், 'அந் நெறி
காதலர்' என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்-
கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும். 398
பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார்,
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க!
வரம்பு இல் பெருமை தருமே;-பரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும். 399
மிகைப்பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை,
இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,-
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.
(புறத்திரட்டு -146)
'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது
இமையத்து அனையார்கண் இல்லை;-சிமைய
நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட!
நகையேதான் ஆற்றுவிடும்.
(புறத்திரட்டு - 1107)
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?
(புறத்திரட்டு - 1139)

Subscribe to:
Posts (Atom)